14 Mar 2012

கர்மவினையை நீக்கிட ஒரு சுலப வழிமுறை:யோகி கைலாஷ்நாத்

சித்தர்கள் ஜீவசமாதித் தலங்களில் இருக்கும் சித்தரின் உச்சந்தலைக்குமேல்  இயங்கும் துவாதசாங்கச் சக்கரத்துக்கும் வானில் உள்ள நட்சத்திரம்,சூரிய சந்திர மற்றும் நவக்கிரகங்களின் இயக்கத்துக்கும்,12 ராசி மண்டலங்களுக்கும் உள்ள தொடர்பு ஒருபோதும் விலகுவதில்லை;எனவே தான் பிறந்த நட்சத்திரம்,ராசி,லக்னத்துக்கேற்ற ஜீவசமாதிகளுக்குச் சென்று நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் குறிப்பிட்டுள்ள படி வழிபாடு செய்ய வேண்டும்.

பழனிக்கு மாலை போட வேண்டும் என்றோ,காவடி எடுக்க வேண்டும் என்றோ நீ நினைத்தால், பழனியில் நிர்விகல்ப சமாதியிலிருக்கும் போகர் சித்தர் நினைவில் நீ இருக்கிறாய் என்பது அதன் பொருள் ஆகும்.ஜீவசமாதியாய் இருக்கும் சித்தர் நினைவினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.சமாதியில் இருக்கும் சித்தர் நினைத்தால் அவ்விடத்துக்குச் செல்ல முடியும்.
ஜாதகத்தில் தோஷம் இருந்தால் கூட வானியல் தொடர்பு கொண்டு சித்தர் சமாதித் தலங்களுக்குச் சென்று வருவதால் தோஷ விடுதலை கிடைக்கும் என்பது விஷ்ராந்தி யோக நிலையம் செய்த ஆராய்ச்சிகளால் விளங்கும்.


தற்சமயம்,கலிகாலத்தில் கர்மவினைகளின் பயனால் புத்திரதோஷம்,திருமண தோஷம்,தொழில் தடை,தகுதியிருந்தும் வாழ இயலாமை,ஐஸ்வர்யத் தடை, பிணி,நோய்,விபத்துக்களால் அகால மரணம்,கலாச்சாரச் சீரழிவுகளால் சிக்கித் தவிக்கும் இளைய சமுதாயம் இவை எல்லாவற்றிற்கும் சித்தர் வழிபாடும்,வாழ்வியல் கலைகளாகிய யோகம்,தியானம் போன்றன அருமருந்தாகும்.சித்தர்கள் கண்ட அருந்தவயோகத்தைப் பயின்று அருந்தவ யோகிகள் ஆவோம்.

ஒவ்வொரு துறையை எடுத்துக்கொண்டாலும்,அதில் ஜொலிப்பவர்கள் தொடர்ந்து ஜொலித்துக்கொண்டே இருப்பதும்; ஜொலித்துக்கொண்டே இருப்பவர்கள் அதலபாதாளத்தில் விழுந்துவிடுவதும் வானியலோடும்,சோதிடத்தோடும் ,சித்தர் மகான்களின் சாபங்களோடும் தொடர்புடையதுதான்.ஒரு சில குடும்பங்கள் ஆண் வாரிசு இல்லாமல் போவதற்கும்,மற்றும் தனிமனிதனின் சகல தோஷங்களுக்கும் காரணமாக இருப்பதும் வானியல்,சோதிடம்,கர்மா,சித்தர் சாபம் போன்ற இந்த நான்கு மட்டுமே!!

உதாரணமாக கோவையின் ஸ்ரீஅன்னபூர்ணா உணவகங்களும், சென்னையின் ஸ்ரீசரவணபவன் ஹோட்டல்களும்,சென்னை சில்க்ஸ் = சங்கிலித்தொடர் ஜவுளிக்கடைகளும்,அருப்புக்கோட்டையிலிருந்து விருதுநகர் மாவட்டத்தின் போக்குவரத்துத்துறையில் தனி முத்திரை பதிக்கும் ஸ்ரீஜெயவிலாஸ், மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்து ஆசியாவின் இருசக்கர வாகனச்சந்தையைக் கைப்பற்ற விஸ்வரூபமெடுக்கும் டி.வி.எஸ். என்று பல நிறுவனங்களின் தொழில்களைச் சொல்லலாம்.
 
 
குண்டலினி சக்தியை எழுப்பியவர்கள் மட்டுமே சோதிடத்தில் வல்லுநர்களாக இருக்க முடியும்.அவர்களால் மட்டுமே சூரியக்குடும்பத்தையும்,நட்சத்திரங்களையும், 12 ராசி வீடுகளையும் ஞானக்கண்ணால் காணமுடியும்.
  

13 Jan 2012

ஒருவர் எதனால் புலால் மறுக்க வேண்டும்?


புலால் மறுப்பதற்கு ஐந்து காரணங்கள்:

1. அறம் / மறை காரணம்

புலால் உண்ணுதலை அறம் போதிக்கும் மறைகள் மறுக்கசொல்லுவதால்.
(வேதங்கள், திருக்குறள், திருமந்திரம், கீதை மற்றும் பல மறைகள்)
தன் ருசிக்காக மற்றொரு உயிரின் மாமிசத்தை உண்ணுதல் அறமாகாது.

2. வினைப்பயன் காரணம்

நாம் செய்யும் எல்லா செயல்களும், நம் உணவின் தேர்வு உட்பட வினையென்னும் விளைவாய் திரும்புகிறதென்பது. அந்த உயிரினங்களின் வதையானது ஊழ்வினையாய் திரும்பாமல் தவிர்க்க.


3. றிவுத்தாகம் காரணம் (Supreme Conciousness)

உடலின் இரசாயனக்கூறுகளுக்கு நாம் உண்ணும் உணவே முதல். ஒருவருடைய றிவு, உணர்வுகள், அனுபவ வினைகள் ஆகியவற்றுக்கும் அவர் உண்ணும் உணவுக்கும் தொடர்புண்டு. ஒருவர், உயர்ந்த அறிவு, சமாதானம், மகிழ்சி மற்றும் மற்ற உயிர்களிடம் கருணை கொண்டவராக இருக்கவேண்டும் என விரும்பினால், புலால் உண்ணுதல் அந்த விருப்பவத்திற்கு எதிர்வினையாகத்தான் அமையும். புலால் உண்ணுவதால், பெருங்கோபம், மன உளைச்சல், பொறாமை, சந்தேகம், இறப்பைப்பற்றிய அதீத பயம் போன்றவை அவர் உண்ணும் மாமிசத்தலேயே அவருக்கு ஏற்படக்கூடும். இன்றைய சிக்கல் மிகுந்த சமுதாய சூழ்நிலையில், மேற்சொன்ன தீக்குணங்கள் தோன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட காரணங்களை சொல்லலாம் என்பது வேறு விஷயம். ஆனால் அவற்றில் இதுவும் ஒன்று.

4. உடல் நலம் காரணம்
புலால் தவிர்த்த உணவு ஜீரணமானதற்கு எளிதென்றும், பலவிதமான ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன என்றும் மருத்துவத்துறை கூறுகிறது. இன்றைய சூழ்நிலையில் மனித இனத்தை அழித்துக்கொண்டிருக்கும் பல்வேறு நோய்கள் புலால் தவிர்ப்பவர்களுக்கு உணவால் வரும் சாதகம் குறைவே. அவர்களிடம் நோய் எதிர்ப்புச்சக்தியும் அதிகம்.

5. சுற்றுப்புற சூழல் காரணம்

இந்த உலகம் பெருந்துன்பத்தில் உழல்கிறது. தினந்தேறும் குறைந்துபோகும் உயிரினங்களால். மாமிசத்திற்காக உயிர்வதைப்படுவதை தவிர்ப்பதால் உயிரினங்கள் அழிவதையும், காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவதை தவிர்ப்பதால், அதனால் அழிந்துபோகும் காடுகளை காப்பாற்றவும், ஏன் நீர், காற்று மாசுபடுவதை தவிர்க்கவும் கூட உதவும். இந்த ஒரு காரணத்திற்காகவே மாமிசம் உண்பதை நிறுத்தியவர்களும் உண்டு.