21 Dec 2011

விளக்கு துலக்க நல்ல நாட்கள் எது ?

ஞாயிறு, திங்கள் ,வியாழன் , சனி  ஆகிய நாட்களில் குத்துவிளக்கை துலக்குவது
வெள்ளி : செவ்வாயில் துலக்குவதை விட மிகுந்த பலன் தரும். இதற்கு காரணம் உண்டு  . திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரை விளக்கில் குபெரதனயட்சனி குடியிருப்பாள்  செவ்வாய் புதனில் விளக்கை கழுவினால் இவள் வெளிஎரிவிடுவாள் என்ற நம்பிக்கை உண்டு . அதற்காக வெள்ளி செவ்வாயில் விளக்கை துலக்க வேண்டும் என்பது நமது பாரம்பரிய மரபையும் விட்டு விட முடியாது . எனவே திங்கள் மற்றும் வியாழன் இரவில் குளிரவைத உடன் விளக்கை துலக்கிவிட்டால் வெள்ளிகிழமை அதிகாலைபொழுதில் விளக்குஎற்றுபவர்களுக்கும் வசதியாக இருக்கும் . இப்படி கழுவுவதற்கும் நேரம் காலம் உண்டு . அன்று 9 மணி முதல் 9 ,. 30 க்குள் விளக்கை நன்றாக துடைத்து விட்டு பூட்டி விட வேண்டும் . ஏனெனில்  வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை குபேர சங்க நிதியட்சனி விளக்கில் குடியேருவாள். ஆகவே விளுக்குகளை கழுவ திங்கள் மற்றும் வியாழன் மின்னிரவுவரையும் சனி ஞாயிறு  தேர்ந்தெடுப்பது மிகவும் சிறந்தது . ஒரு வேலை பொங்கல் , தீபாவளி ,கார்த்திகை போன்ற விஷேச நாட்களில் வருமானால் இந்த நிபந்தனைகளில் இருந்து விதிவிலக்கு உண்டு . அன்று விளக்கை தண்ணீரில் கழுவி , பிறகு சுத்தமான துணியால் துடைத்து தரமான விபூதியால்  விளக்கை தேய்த்து விட வேண்டும் .


          ராத்திரிகளில் கண்ணீர் சிந்தும் டிவி தொடர்களை ஒத்தி வைத்து விட்டு  .நம் வீடு தேடி வரும் மகாலக்ஷ்மியை  வரவேற்பதில் இனி அக்கறை கட்டுவோம் .
 
 

18 Dec 2011

நித்யானந்தர் பற்றிய ஒரு தொகுப்பு

     வணக்கம் நண்பர்களே ,

                          நன் கடந்த 2009 ஆம் ஆண்டில் வேலை செய்து கொண்டு இருக்கும் பொது அப்போது என் நண்பர் சொன்ன வழியின் பேரில் என்னுடைய குருநாதர் அவர்கள் ஆசியுடன் நன் நித்யானந்தர் தியான பயிற்சி வகுப்பு இல் ஒரு நாள்  கலந்து கொண்டேன் ஆனால் அன்று தான் என்னுடைய வாழ்நாளில் காணமுடியாத அனுபவத்தை நன் உணர்ந்தேன் உண்மையில் சொல்கிறேன் ஒரு மனிதனிடம் நல்ல செயல்களும் இருக்கும் கேட்ட செயல்களும் இருக்கும்

அது போலத்தான் நித்யானந்தர் அவர்களிடம் உள்ளது அவரிடம் உள்ள நல்ல செயல் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று அவர் சொல்லி கொடுக்கும் தியான வகுப்பு தான் உங்களால் முடிந்தால் ஒரு நாள் செலவு செய்து அவரின் பெங்களூரில் உள்ள பிடத்தி ஆசிரமத்தில் காலையில் அவரிடம் ஆசி பெற்று வாருங்கள் அல்லது அவரின் முன் நடக்கும் தியான வகுப்பில் கலந்து கொண்டு வெட்டிற்கு வந்து அவர் சொல்லிய படி நடந்து பாருங்கள் அப்படி மற்றம் உங்களிடம் வந்து சேரும் .
குறிப்பு : தியான பயிற்சி வகுப்பிற்கு கட்டணம் உண்டு அதை தயவு செய்து புரிந்து கொண்டு செல்லுங்கள் .

அடுத்தது அவரிடம் உள்ள கேட்ட செயல்கள் அவர் ஒரு நாளைக்கு பல ஆயிரகணக்கான பக்தர்களை சந்திக்கின்றார் அவர்களின் பாவங்களை எல்லாம் அவர் மட்டுமல்லாது அவரின் ஆசிரமத்திஇல் உள்ள சந்நியாசிகளிடமும் நம்முடைய பாவங்கள் அவர்கள் மேல் உள்ளன அதனால் தான் அவர்கள்  மீது இத்தனை குற்றச்சாட்டுகள் ஆனாலும் அவர் மனம் தளராமால் பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றார் அதனால்தான் என்னவோ அவர் ( நித்யானந்தர் ) மீது பாலியல் வழக்கு போடப்பட்டுள்ளது அது எல்லாம் நமக்கு தேவை இல்லை என்றால் அவரை சந்தித்து ஆசி வங்கி கொள்ளுங்கள் உங்களின் ஆன்ம ஞானம் உங்களிடம் வந்து சேரும் .

நீங்கள் கேட்கலாம் அவரிடம் நான் எப்படி காலில் விழுந்து ஆசி வாங்கலாம் அவரும் ஒரு மனிதர்தானே  என்று !

ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் எந்த மனிதனிடமும் யார் வேண்டுமானாலும் காலில் விழுந்து ஆசி வாங்கி கொள்ளலாம் ஏன் என்றால் நாம் ஆசி வாங்க அவர்களின் காலில் விழும் பொது அவர்கள் கையை தூக்கி நம் தலையின் முன் வைப்பார்கள் அப்போது அவர்களின் ஆசி நமக்கு பூரணமாக நமக்கு கிடைக்கும்  ஆனால் நம் விழும் நபர் எப்படி பட்டவர் என்பது முக்கியம் ஏன் என்றால் அவரிடம் ஆண்மாஞானம் பெற்று இருக்க வேண்டும்  அப்படி எல்லை என்றால் அவர் நம்மை பூரணமாக நம்மை வாழ்த்த வேண்டும் அப்படிப்பட்டவர் காலில் விழுந்து வணங்க வேண்டும் .

அதே போல நாம் நம்முடைய அப்பா அம்மா காலில் விழுந்து வணங்கலாம் நம்முடைய அப்பா அம்மா நமக்கு எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள் .
                                           வாழ்க வளமுடன்



நாட்டுச் சர்க்கரை

இனிப்புப் பிரியர்களின் கவனத்துக்கு!
இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பாலில் வரை சர்க்கரை ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை. சர்க்கரையை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளைச் சர்க்கரையை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்றால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சர்க்கரைத் தயார் செய்ய என்னென்ன ரசயாணப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாருங்கள்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 செண்ட் கிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு வருகிறது சர்க்கர. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சர்க்கரையில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சர்க்கரையில் விஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசயானம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

உங்கள் சட்டை காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சர்க்கரையை எடுத்து தேய்த்துப் பாருங்க. நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு சமாச்சாரத்தைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சர்க்கரையை சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடு படும்?

குடல் மட்டுமல்ல, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி (ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான நுழைவுவாயில்) நிச்சயம் வரும்.

சரி, இன்று முதல் வெள்ளைச் சர்க்கரை சாப்பிட வேண்டாம். இனி இனிப்புக்கு என்ன வழி?

வழியில்லாமல் இல்லை. ஆலைகளில் தயாரான வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை ஒழித்துக் கட்டிவிட்டு, வெல்லம், நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும்

சாஸ்திரங்களில் 9 விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த 9 விஷயங்கள் இவை தான்:
1. ஒருவரது வயது, 2. பணம் கொடுக்கல் வாங்கல் 3. வீட்டு சச்சரவு, 4. மருந்துகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள், 5. கணவன்-மனைவி அனுபவங்கள், 6. செய்த தானம், 7. கிடைக்கும் புகழ், 8. சந்தித்த அவமானம், 9. பயன்படுத்திய மந்திரம். இந்த 9 விஷயங்களையும் என்றும் ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதை தவிர இன்னும் ஏராளமான  விஷியங்கள் உள்ளன  அதை அடுத்த நல பார்க்கலாம்  வாழ்க வளமுடன் .

ஸ்ரீ பைரவ வழிபாட்டு மகிமை


நேரடியாக மோத முடியாத, மோத விரும்பாத எதிரிகளை - ஒழித்துக் கட்ட , எதிரிகளால் உங்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க , எதிரிகள் உங்களை நினைத்தாலே மிரள வைக்க ,  உங்களுக்கு தேவையான ஆன்ம பலம்  அளிக்கும் இறை ரூபம் - ஸ்ரீ கால பைரவர்.

ஸ்ரீ பைரவரைப் பற்றிய , பல அபூர்வ தகவல்களை உடைய இந்த வார சிறப்புக் கட்டுரையை,  ஆக்கம் செய்து நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்பவர் : மதிப்பிற்குரிய திரு . கை.வீரமுனி அவர்கள். இதில் கூறப்பட்ட பல தகவல்கள் - ஆன்மீக வழிகாட்டி . ஐயா. மிஸ்டிக் செல்வம் அவர்கள், பல வருட ஆராய்ச்சிக்குப் பின், அனுபவப் பூர்மாக உணர்ந்த உண்மைகள்.

ஒரு பொக்கிஷத்திற்கு நிகரான இந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் , பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

ஸ்ரீ பைரவ அவதாரம்



அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து, சிவ பெருமானிடம்   வரம்  பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.

தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

1)அசிதாங்க பைரவர் + பிராம்மி
2)ருரு பைரவர் + மகேஸ்வரி
3)உன்மத்த பைரவர் + வாராஹி
4)குரோதன பைரவர் +வைஷ்ணவி
5)சண்டபைரவர் + கவுமாரி
6)கபால பைரவர் + இந்திராணி
7)பீஷண பைரவர் + சாமுண்டி
8)சம்ஹார பைரவர் + சண்டிகா

ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர். இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.

பைரவ வழிபாடு செய்வதின் அவசியம் :
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.


தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.


தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லை களிலிருந்து விடுபட முடியும். 

பைரவரை வழிபாடு செய்வது எப்படி?

 பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது.பொதுவாக,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.

இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய,ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது.

ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.

சாதாரணமாக,நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.


மிக அரிதாக,சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான்,மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல்,பில்லி சூனியம்,பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய,வாழ்வில் வளம் பெற,திருமணத்தடைகள் நீங்கிட,பிதுர்தோஷம்,சனி தோஷம்,வாஸ்து குறைபாடுகள் நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பழமையான சிவாலயங்களில் கோவிலின் பாதுகாவலராக பைரவர் இருக்கிறார்.அவரை வழிபாடு செய்தால் போதுமானது.

அஷ்ட பைரவர்,அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்


சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்

ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்

ஒம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ்தாய தீமஹி
தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ,அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும்.இதனால்,சந்திர திசை யோக திசையாக இருந்தால்,யோகங்கள் அதிகரிக்கும்.சந்திர திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால்,கஷ்டங்கள் குறையும்.

செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி

ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்

ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்

செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள்,இந்த மந்திரங்களை உங்கள் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 9 முறை ஜபித்துவருவது நல்லது.


புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி

ஓம் மஹா மந்த்ராய வித்மஹே
வராஹி மனோகராய தீமஹி
தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்

ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வராஹி ப்ரசோதயாத்


புதன் மகாதிசை நடப்பவர்கள் ,பைரவர் சன்னிதியில் இந்த மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்கலாம்.

குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி

ஓம் ஞான தேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்


ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே
கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்

குருதிசை நடப்பவர்கள் பைரவ சன்னிதியில் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.


சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்+மாஹேஸ்வரி

ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்


ஓம் வருஷத் வஜாய வித்மஹே
ம்ருக ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்

சுக்கிர மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரி மந்திரங்கள்.


சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி


ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்


ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்

சனி மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரிகள்.


ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ

ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ:ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்

ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே
மஹாதேவி ச தீமஹி
தந்நோ: சண்டி ப்ரசோதயாத்

ராகு தசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் இவை.


கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி

ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ராய தீமஹி
தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்


ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ; காளி ப்ரசோதயாத்


கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்.

இவற்றில் தந்நோ: என்பதை தந்நோஹ் என்று உச்சரிக்க வேண்டும்.



ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே !
சூல ஹஸ்தாய தீமஹி !
தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

ஓம் திகம்பராய வித்மஹே
தீர்கதிஷணாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்

கால பைரவ அஷ்டகம் 

தேவராஜஸேவ்யமானபாவனாம்க்ரிபங்கஜம்
வ்யாலயக்யஸுஉத்ரமின்துஷேகரம் க்ருபாகரம் .
நாரதாதியோகிவ்ரு‍ந்தவந்திதம் திகம்பரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

பானுகோடிபாஸ்வரம் பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் .
காலகாலமம்புஜாக்ஷமக்ஷஷுஉலமக்ஷரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         
ஷூலடம்கபாஷதண்டபாணிமாதிகாரணம்
ஷ்யாமகாயமாதிதேவமக்ஷரம் நிராமயம் .
பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ரதாண்டவப்ரியம்
காஷிகாபுராதிநாதகாலபைரவம் பஜே ..          

புக்திமுக்திதாயகம் ப்ரஷஸ்தசாருவிக்ரஹம்
பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோகவிக்ரஹம் .
வினிக்வணன்மனோக்யஹேம கிங்கிணீலஸத்கடிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்கனாஷனம்
கர்மபாஷமோசகம் ஸுஷர்மதாயகம் விபும் .
ஸ்வர்ணவர்ணஷேஷ்ஹபாஷஷோபிதாம் கமண்டலம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         
ரத்னபாதுகாப்ரபாபிராமபாதயுக்மகம்
நித்யமத்விதியமிஷ்டதைவதம் நிரம்ஜனம் .
ம்ரு‍த்யுதர்பனாஷனம் கராலதம்ஷ்ட்ரமோக்ஷணம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

அட்டஹாஸபின்னபத்மஜாண்டகோஷஸம்ததிம்
த்ரு‍ஷ்டிபாத்தனஷ்டபாபஜாலமுக்ரஷாஸனம் .
அஷ்டஸித்திதாயகம் கபாலமாலிகாதரம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         

பூதஸம்கனாயகம் விஷாலகீர்திதாயகம்
காஷிவாஸலோகபுண்யபாபஷோதகம் விபும் .
நீதிமார்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்
காஷிகாபுராதினாதகாலபைரவம் பஜே ..         
 
காலபைரவாஷ்டகம் படம்தி யே மனோஹரம்
க்யானமுக்திஸாதனம் விசித்ரபுண்யவர்தனம் .
ஷோகமோஹதைன்யலோபகோபதாபனாஷனம்
ப்ரயான்தி காலபைரவாம்க்ரிஸன்னிதிம் நரா த்ருவம்

இதி ஸ்ரீமத் சங்கராசார்ய விரசிதம்
ஸ்ரீ காலபைரவாஷ்டகம் சம்பூர்ணம் ..



சொர்ணாகர்ஷண பைரவ மந்திரம்

ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்

ஓம் த்ரிபுராயை ச வித்மஹே
பைரவ்யை ச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்

ஸ்ரீ பைரவ த்யானம்

ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

சகல செல்வங்களும் பெற, நீதி கிடைக்க, பாவங்கள் அழிய, வேண்டுவன கிடைக்க, மரணபயம் நீங்கிட, மோட்சம் கிடைக்க, ஆதி சங்கரர் அருளிய , மேலே கூறிய ஸ்ரீ கால பைரவ அஷ்டகம் பாராயணம்  செய்யவும். 

ஸ்ரீ பைரவ வழிபாடு மேற்கொள்ளும் அன்பர்கள்  சைவ உணவுப் பழக்கம் கொண்டவராக இருத்தல் வேண்டும். தினம்தோறும் குளித்து முடித்து விட்டு பக்தியுடனும் ஆச்சாரத்துடனும் இந்த ஸ்தோத்திரங்களைச் சொல்லி இறைவனைத் தொழ வேண்டும்.  புறதூய்மையோடு அகத்தூய்மையும் மிக அவசியம். தொடர்ந்து 48 நாட்கள் தடையில்லாமல் நம்பிக்கையோடு சொல்லி வர பலன் நிச்சயம்.

ஒவ்வொரு மனிதர்களின் மனதுக்குள்ளும் தைரிய உணர்ச்சியாக இருப்பவர் பைரவர்.பைரவர்களில் வீட்டில் வைத்து வழிபடத்தக்கவர் சொர்ண பைரவர் மட்டுமே!!!

 தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்து வழிபட்டுவரவேண்டும்.இப்படி குறைந்தது எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபட்டுவர நமது செய்தொழில் அபாரமான வளர்ச்சியை அடையும்.

எந்த தொழில் செய்து நொடித்துப்போனாலும்,ஊருக்கெல்லாம் கடன் கொடுத்து அந்தப் பணம் திரும்ப வராமல் போனதாலும்,செல்வச் செழிப்பிலிருந்து வறுமையின் புதைகுழிக்குள் வீழ்ந்தவர்களும் தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு தொடர்ந்து செய்துவந்து மாபெரும் வெற்றியடையலாம்.

அரசியலில் மகத்தான பதவிகளை அடைய விரும்புவோர்கள் இதே வழிமுறையைப் பின்பற்றி உச்சத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கும் சொர்ண ஆகர்ஷணபைரவர்களின் கோவில்கள் வருமாறு:

படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் அமரர் படப்பை சித்தர் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் சொர்ணகால பைரவருக்கு தனி கோவில் இருக்கிறது.

சிதம்பரம் கனக சபையில் சொர்ண ஆகர்ஷணபைரவர் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம் அருகில் திருச்சேறையில் காலபைரவரை வழிபட,கடன் தொல்லை நீங்கும்.

திருச்சியில் மலைக்கோட்டைக்கு தெற்கே பெரிய கடைவீதியில் சொர்ணபைரவநாத சுவாமி திருக்கோவில் இருக்கிறது.

திருமயம் அருகே இருக்கும் தபசுமலையில் சொர்ண ஆகர்ஷணபைரவர் கோவில் இருக்கிறது.

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு என்னும் கிராமத்தில் அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதி இருக்கிறது.மிகவும் சக்திவாய்ந்த பைரவராக இருக்கிறார்.

தேவக்கோட்டையில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தனிக்கோவில் இருக்கிறது.

விருதுநகரில் ரயில்வே நிலையம் அருகே சுடலை கோவில் அருகே சொர்ண ஆகர்ஷண பைரவர் ஒரு தனியார் கோவிலாக இருக்கிறது.

இனி,அடுத்துவரும் தேய்பிறை அஷ்டமி நாட்களின் பட்டியலை நாம் பார்ப்போம்:


26.3.11 சனி காலை 11.35 முதல் 27.3.11 ஞாயிறு காலை 11.12 வரை

24.4.11 ஞாயிறு நள்ளிரவு 12.44 முதல் 25.4.11 திங்கள் நள்ளிரவு 1.22 வரை

24.5.11 செவ்வாய் மதியம் 2.52 முதல் 25.5.11 புதன் மாலை 4.18 வரை

23.6.11 வியாழன் காலை 5.44 முதல் 24.6.11 வெள்ளி காலை 7.38 வரை

22.7.11 வெள்ளி இரவு 9 முதல் 23.7.11 சனி இரவு 10.52வரை

21.8.11 ஞாயிறு மதியம் 12.9 முதல் 22.8.11 திங்கள் மதியம் 1.25 வரை

19.9.11 திங்கள் நள்ளிரவு 2.44 முதல் 20.9.11 செவ்வாய் நள்ளிரவு 3.05வரை

19.10.11 புதன் மாலை 4.15 முதல் 20.10.11 வியாழன் மாலை 3.39 வரை

18.11.11 வெள்ளி விடிகாலை 4.58 முதல் நள்ளிரவு 3.31 வரை

17.12.11 சனி மாலை 4.36 முதல் 18.12.11 ஞாயிறு மாலை 2.35 வரை

15.1.12 ஞாயிறு நள்ளிரவு 3.38 முதல் 16.1.12 திங்கள் நள்ளிரவு 1.19 வரை

14.2.12 செவ்வாய் மதியம் 2.08 முதல் 15.2.12 புதன் காலை 11.52 வரை

14.3.12 புதன் நள்ளிரவு 12.18 முதல் 15.3.12 வியாழன் நள்ளிரவு 10.24 வரை

எல்லாம் சரி! ஏன் சொர்ண ஆகர்ஷண பைரவரை அஷ்டமியில் வழிபட வேண்டும்?

நமக்குச் செல்வச்செழிப்பைத் தருவது அஷ்ட லட்சுமிகளே! இவர்கள் வரம் தந்து கொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறைந்துகொண்டே வரும்.அப்படி குறையும் சக்தியை ஒவ்வொரு அஷ்டமியிலும்,அதுவும் தேய்பிறை அஷ்டமியிலும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டே பெருக்கிவருகின்றனர்.இது எப்பேர்ப்பட்ட தேவரகசியம்!!!

மனிதர்களாகிய நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும்,சொர்ண ஆகர்ஷண பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.

MEDIDATION


வீடு   - பத்து மடங்கு பலன்
கோயில் -நூறு மடங்கு பலன்
ஆற்றங்கரை -லட்சம் மடங்கு பலன்
மலை உச்சி -ஒரு கோடி மடங்கு பலன்
சிவன் கோயில் - இரண்டு கோடி மடங்கு பலன்
அம்பிகை சன்னதி - நூறு கோடி மடங்கு பலன்
சிவன் சன்னதி - கணக்கற்ற மடங்கு பலன் .
                                   
                                அதனால் தினமும் நம் தியானம் செய்ய முயல்வோம்

வாழ்க வளமுடம்

ஓம் ஸ்ரீ காலபைரவ ரா நமஹா 

உணவே மருந்து

வீட்டு பட்ஜெட்டில் மாதம்தோறும் மருத்துவச் செலவுக்கே பெரிய அளவில் நிதி ஒதுக்கவேண்டி இருக்கிறது. இந்த நேரத்தில், ''ரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால் என பல்வேறு நோய்களையும் நமது உணவுக் கட்டுப்பாட்டாலேயே தீர்க்க முடியும்!'' என்கிறார் 'அனாடமிக் தெரபி’ என்கிற 'செவி வழி தொடு சிகிச்சை முறை’யை பரப்பிவரும் கோவையைச் சேர்ந்த பாஸ்கர்.

''உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். ரத்தத்தைச் சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.மனித உடலில் சுத்தமான ரத்தத்தை உருவாக்க உணவு, குடிநீர், மூச்சுக் காற்று, தூக்கம், உடல் உழைப்பு ஆகிய ஐந்தையும் ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழர்களுக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. உணவை அள்ளிப்போட்டு வயிற்றின் உள்ளே தள்ளுவதற்குத்தான் வாய் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான வேலை வாயிலேயே ஆரம்பித்துவிடுகிறது.

எக்காரணம் கொண்டும் பசித்தால் மட்டும்தான் சாப்பிட வேண்டும். உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என ஆறு சுவைகள் இடம் பெறுவது அவசியம். அப்போதுதான் ரத்தத்தில் அனைத்து சத்துகளும் இருக்கும். மேலும், பற்களால் நன்கு கடித்தும் மென்றும் கூழாக்கி, நாக்கால் சுவையை ருசித்த பின்னரே உணவை விழுங்கவேண்டும். அப்போதுதான் உமிழ் நீருடன் சேர்ந்து நாம் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள சர்க்கரை நல்ல சர்க்கரையாக மாறும். மனிதன் வாயின் இரு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ்நீர் சுரப்பிகள் இருக்கிறன. இதில் புரோட்டீன், தாது உப்புக்கள் மற்றும் அடுத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கான திரவம் சுரந்திருக்கும். அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த பின் சுமார் 45 நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டரை மணி நேரத்துக்குள் குளிக்கக் கூடாது!'' - நம்மில் எத்தனை பேர் இதனை கடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லை. பாஸ்கர் சொல்வதை மேற்கொண்டும் கேளுங்கள்...

''டிவி. பார்த்தபடி, புத்தகம் படித்தபடி, பேசியபடி சாப்பிடக் கூடாது. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும். ஜீரணமாவதற்கான என்ஸைம் சுரக்காது. ஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்? எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்க முடியாது. இந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறாக இருக்கும். ஒரு வீட்டில் செய்யப்படும் சப்பாத்தியின் அளவு இன்னொரு வீட்டில் செய்யப்படும் மூன்று சப்பாத்திகளுக்கு இணையாக இருக்கும். இதனால், சரியான சாப்பாடு அளவை குறிப்பிடுவது கடினம். சரியான உணவு என்பது முதல் ஏப்பம் வந்தவுடன் நிறுத்திக் கொள்வதுதான். அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம் என்கிறபோது, உணவு மட்டும் விதிவிலக்கா என்ன? காலை தொங்கப் போட்டபடி நாற்£லியில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது அல்ல. மேலும், சிலர் கண் மூடி திறக்கும் முன் சாப்பிட்டு முடித்திருப்பார்கள். சிலர், சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். இரண்டும் தவறு. குறைந்தபட்சம் 5 நிமிடம், அதிகபட்சம் 15 நிமிடம்தான் சாப்பிட வேண்டும்!'' என்றவர் கூடுதலாகக் கொடுத்த டிப்ஸ்...

''தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும். தேநீர், காபியை தவிர்த்து எலுமிச்சை, இளநீர், பழ ரசங்களை குடிக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேர உறக்கம் அவசியம். தூங்கும் போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். சாப்பாட்டில் இருக்கிற கார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறது. வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். அதை விஷம் என்றுதான் சொல்லவேண்டும். இனிப்பு தேவை என்கிறபோது தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் சொல்வது ஒன்றும் புதிய விஷயங்கள் அல்ல. அன்றே நம் முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.இனியாவது செலவு மற்றும் மருந்து இல்லாத, அனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சி செய்யுங்கள்!''

அமைலேஸ் என்கிற என்ஸைம் போன்றவை இருக்கின்றன. இந்த என்ஸைம் நாம் சாப்பிடும் உணவு வேகமாக ஜீரணமாக உதவுகிறது. வாயிலேயே உணவு நன்றாக மெல்லப்படுவதால், இரைப்பையில் ஜீரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் சிரமம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு மென்று சாப்பிடும்போது ஆரம்பத்தில் சில தினங்களுக்கு தாடை வலிக்கும். ஆனால், போகப்போக பழகிவிடும்.
அடுத்து சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னும் பின்பும் கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பாட்டு வேளையில் மனித வயிற்றில் உணவு ஜீரணமாவதற்கான திரவம் சுரந்திருக்கும். அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், அந்த திரவத்தின் தீவிரம் குறைந்து உணவு சரியாக ஜீரணமாகாது. குளித்த பின் சுமார் 45 நிமிடம் கழித்துதான் சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டரை மணி நேரத்துக்குள் குளிக்கக் கூடாது!'' - நம்மில் எத்தனை பேர் இதனை 'தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும். சிறு நீர் கழித்தால் உடனே தண்ணீர் குடிக்கவேண்டும். தேநீர், காபியை தவிர்த்து எலுமிச்சை, இளநீர், பழ ரசங்களை குடிக்கவேண்டும். குறைந்தது ஆறு மணி நேர உறக்கம் அவசியம். தூங்கும் போது ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். சாப்பாட்டில் இருக்கிற கார்ப்போஹைட்ரேட் என்கிற மாவு சத்துதான் சர்க்கரையாக மாறுகிறது. வெள்ளை சர்க்கரை என்கிற சீனியை பயன்படுத்துவதை நிறுத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். அதை விஷம் என்றுதான் சொல்லவேண்டும். இனிப்பு தேவை என்கிறபோது தேன், வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் சொல்வது ஒன்றும் புதிய விஷயங்கள் அல்ல. அன்றே நம் முன்னோர்கள், 'நொறுங்கத் தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று சொல்லி இருக்கிறார்கள்.இனியாவது செலவு மற்றும் மருந்து இல்லாத, அனாடமிக் தெரபி முறைப்படி சாப்பிட்டு நலமோடு வாழ முயற்சி செய்யுங்கள்!''கடைபிடிக்கிறோம் என்பது தெரியவில்லை. பாஸ்கர் சொல்வதை மேற்கொண்டும் கேளுங்கள்...

''டிவி. பார்த்தபடி, புத்தகம் படித்தபடி, பேசியபடி சாப்பிடக் கூடாது. நாம் எதைச் செய்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் என்ஸைம் சுரக்கும். ஜீரணமாவதற்கான என்ஸைம் சுரக்காது. ஒருவர் எத்தனை இட்லி சாப்பிடலாம்? எத்தனை சப்பாத்தி சாப்பிடலாம் என்பதை வரையறுக்க முடியாது. இந்த உணவு பலகாரத்தின் அளவு ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறாக இருக்கும். ஒரு வீட்டில் செய்யப்படும் சப்பாத்தியின் அளவு இன்னொரு வீட்டில் செய்யப்படும் மூன்று சப்பாத்திகளுக்கு இணையாக இருக்கும். இதனால், சரியான சாப்பாடு அளவை குறிப்பிடுவது கடினம். சரியான உணவு என்பது முதல் ஏப்பம் வந்தவுடன் நிறுத்திக் கொள்வதுதான். அளவுக்கு மீறினால் அமிர்தமே விஷம் என்கிறபோது, உணவு மட்டும் விதிவிலக்கா என்ன? காலை தொங்கப் போட்டபடி நாற்£லியில் உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது அல்ல. மேலும், சிலர் கண் மூடி திறக்கும் முன் சாப்பிட்டு முடித்திருப்பார்கள். சிலர், சாப்பிட முக்கால் மணி நேரம் எடுத்துக்கொள்வார்கள். இரண்டும் தவறு. குறைந்தபட்சம் 5 நிமிடம், அதிகபட்சம் 15 நிமிடம்தான் சாப்பிட வேண்டும்!'' என்றவர் கூடுதலாகக் கொடுத்த டிப்ஸ்...
 

விளக்கு ஏற்றும் முறை

விளக்கு ஏற்றும் முறைகலுக்கோன பலன்கள்.
ஒரு முகம் ஏற்றினால்   -   மத்திய பலன் கிட்டும்
இரு முகம் ஏற்றினால்   - குடும்ப ஒற்றுமை  கிட்டும்
முன்று முகம் ஏற்றினால்   - புத்திர சுகம் கிட்டும்
நான்கு முகம் ஏற்றினால்   - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்
ஐந்து முகம் ஏற்றினால்    - ஐஸ்வர்யம்  பெருகும் .

அகவே நாமும் தினமும் விளக்கு ஏற்றி பயன் பெறுவோமாக .

வாழ்க வளமுடன்

கீதாசாரம்

எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது ,

எது நடக்கிறதோ , அது நன்றாகவே நடக்கிறது ,

எது நடக்க இருக்கிறதோ ,
அதுவும் நன்றாகவே  நடக்கும் ,

உண்ணுடுயதை எதை  நீ இழந்தாய் ?

எதற்காக  நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு ?

எதை நீ படைத்திருந்தாய் , அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்து கொண்டாயோ,

அது இங்கிருந்து எடுக்கப்பட்டது ,


எதை கொடுத்தாயோ ,

அது இங்கிருந்து கொடுக்கப்பட்டது ,

எது இன்று உன்னுடையதோ ,

அது நாளை மற்றவருடையாகுது ,

மற்றொரு நாள், அது வேறோருவுடையதாகிறது ,இதுவே உலக நியதியும் ,

எனது படைப்பின் சாராம்சமாகும்.


பகவான்  ஸ்ரீ கிருஷ்ணர்

அஷ்டமி

நாம் நாளை காலை 9 முதல் 10.30க்குள் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவோம்;அவரது படத்தின் முன்பாக நெய் தீபம் ஏற்றிவைத்து,அவரது மூல மந்திரத்தை 330 தடவை ஜபிப்போம்;நாளை மறுநாள் ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் இதேபோல,330 தடவை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரத்தை ஜபிப்போம்